Posts

Showing posts from May, 2018

தென்னாபிரிக்காவில் சிறுவனைத் தின்றது சிறுத்தை

Image
தென் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரசிதி பெற்றது. இந்த பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளின் குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர்.  அங்கு வேலைப்பார்க்கும் பெண் வனத்துறை அதிகாரியின் 3 வயது மகன் தனது பாட்டியுடன் இருந்தார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தனியே வீட்டினுள் விட்டுவிட்டு பாட்டி வெளியே சென்றுள்ளார்.  பாட்டியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் பாதுகாப்பில்லாத இடத்திற்கு சென்றுவிட்டான். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை சிறுவனை கடித்து இழுத்து சென்றது. சிறுவனின் அழுகுரல் கேட்டு வந்த பாட்டி சிறுத்தை இழுத்துச் செல்வதை கண்டார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அடுத்த நாள் சிறுவனின் எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது. சிறுத்தையானது சிறுவனை கடித்து தின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடியிருப்பு பகுதியை சுற்று பாதுகாப்பு வேலி போடப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும், சிறுவனை கொன்ற சிறு...

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

Image
சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடைய அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து மிகவிரைவில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றி இன்னும் அவர் வாய்திறக்கவில்லை, ஏனென்றால் ஒப்பந்தம் படி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் அவர் நெருங்கிய வட்டாரத்தில் அவருக்கு அழைப்பு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

முதலமைச்சருடன் நெருங்கும் முஸ்லீம் பிரதிநிதிகள்!

Image
தமிழரசுக்கட்சியின் முகவராக செயற்படும் வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மினை புறந்தள்ளி முதலமைச்சருடன் நெருக்கமான உறவை பேண முஸ்லீம் தரப்புக்கள் தயாராகிவருகின்றன. வடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது முன்னின்று செயற்பட்டவர்களுள் அஸ்மினும் ஒருவராவார். இந்நிலையில் வடக்கு முஸ்லீம்கள் தொடர்பில் முதலமைச்சர் அக்கறையுடன் செயற்படவில்லையென அஸ்மின் பிரச்சாரங்களை முஸ்லீம்களிடையே மேற்கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 04 ம் திகதி வெள்ளிக்கிழமை அஸ்மினிற்கு எதிராக  முஸ்லீம்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன்; உருவப் பொம்மையும்  எரிக்கப்பட்டிருந்தது. இந்த உருவப் பொம்மை எரிப்பை முழுக்க யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களே செய்தனர்.இந்த விடயத்தை அரசியலாக்க தற்போதைய மாகாண சபை போனஸ் உறுப்பினர் அயூப் அஸ்மீன்; மக்களை தவறான வழியில் திசை திருப்பமுற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே வடக்கில் மீளக்குடியேறிய முஸ்லீம் மக்களது சார்பு பிரதிநிதிகள் முதலமைச்சருடன் நெருக்கமான உறவை பேணும் வகையில் சந்திப்பினை நடத்தியுள்ளனர். 

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா திருமணம்! சர்ச்சையான நேரத்தில் உண்மையை வெளியிட்ட பிரபலம்

Image
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்று முடிந்து. நீண்ட நாளாக பெண் தேடி வந்த ஆர்யா இதன் மூலம் தன் வாழ்க்கை துணையை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் இருந்த சீதா, சுசானா, அபர்ணதி என மூன்று போட்டியாளர்களில் ஒருவரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஆர்யா மற்றும் நிகழ்ச்சி குழு பல புகார்கள் எழுந்தது. சமீபத்தில் அவரை இதை வைத்து கிண்டல் செய்தனர். இந்நிலையில் இதன் போட்டியளர்களில் ஒருவரான அபர்ணதி உண்மையை வெளியிட்டுள்ளார். keerthi suresh new hot pic ஆர்யா ஒரு கேடி. அவனுடய குணங்கள் எனக்கு பிடித்தது. தன் முடிவால் மற்ற யாரையும் சங்கடப்படுத்தி விடக்கூடாது என இருந்தான். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அவன் திருமணம் செய்துகொள்ளவே வந்தான். ஆனால் அவனுக்கு தன் சொந்த வாழ்கையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஒருவேளை யாரையாவது திருமணம் செய்துகொண்டால் அந்த துணையும் நம்மோடு சிரமப்படவேண்டுமா என நினைத்ததால் தான் யாரையும் அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் இப்போதைக்கு திருமணம் செய்ய விரும்பவில்லை. ஒருவேளை இறுதியில் முடிவை என்னிடம் கொடுத...

ரொமான்ஸ் மோடில் அஜித், நயன்தாரா – 'விஸ்வாசம்' அப்டே

Image
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்குகிறார்.  இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விஸ்வாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.  டி.இமான் இசையமைக்கும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கியது. இந்நிலையில், இன்று (மே 8-ஆம் தேதி) முதல் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்.

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?

Image
யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டை புறந்தள்ளி சபையினை மதியாது முன்னாள் ஈபிடிபி சார்பு முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. யாழ்.மாநகர சபைக்கான வேட்பாளராக போட்டியிட யோகேஸ்வரி பற்குணராசா முன்னர் விருப்பம் கொண்டிராத நிலையில் பின்னர் பட்டியல் மூலம் உள்ளே புகுந்திருந்தார். இந்நிலையில் சபையின் மாண்பைப் பேணும் வகையில் யோகேஸ்வரி பற்குணராசா செயற்படுவதில்லையென யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், கூற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை சபை மண்டபத்தில் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றிருந்தது.  இதன்போது, கடந்த அமர்வின் கூட்ட அறிக்கையில்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தனது கருத்தை தனது இருக்கையில் அமர்ந்தவாறு தெரிவித்தார். வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு சிலை வைப்பதில் கூட ஈபிடிபிக்கு ஆட்சேபனையில்லையென தெரிவித்த அவர் எழுந்து நின்று சபையில் வாதிடவேண்டியதில்லையெனவும் வாதி...

கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்துக்காக தாமதம் : மு.க.ஸ்டாலின்

Image
கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்துக்காக தமிழகத்தின் காவிரி உரிமையை பாதுகாத்து நீதி வழங்குவதில் செய்து வரும் தாமதம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கி துணை செய்திருப்பது, உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்புக்கே மாறான நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.  காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்த விடாமல் இதுவரை தடுத்து வரும் மத்திய பாஜக அரசுக்கும், அதனுடன் இணைந்து செயல்பட்ட அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.  வரும் 14 ஆம் தேதி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, இறுதி தீர்ப்பின் பலனை தமிழக விவசாயிகள் அனுபவிப்பார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உச்சநீதிமன்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அனுமதியின்றி சுற்றுலா செல்லக் கூடாது : புதிய உத்தரவு

Image
பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி சுற்றுலா செல்ல கூடாது என மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது 3 பேர் நீர்நிலையில் மூழ்கி பலியானார்கள்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வானிலை அறிக்கை மூலம் சுற்றுலா இடம் தேர்வு செய்தல், சுற்றுலா 4 நாட்கள் மிகாமல் இருக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தி இருக்கிறது. 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான உணவு, இடம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.  மலையேற்றம் இருப்பின் வனத்துறை அனுமதி மற்றும் வழிகாட்டியுடன் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆறு, ஏரி, குளம், கடல், அருவி ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 2 பேர் பலி

Image
ஜேர்மனியில் பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்தனர். Augsburg பகுதியில் இருந்து சென்ற பயணிகள் ரயில், ஐசாச் (Aichach) ரயில் நிலையத்தை கடந்து, எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. தெற்கு ஜேர்மனியின் முனிச் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐசாச் பகுதியில் நடந்த விபத்தில் பயணிகள் ரயிலின் ஓட்டுநரும், பெண் பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.  மேலும் காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். A goods train and a passenger train collided in southern Germany on Monday, rail operator Deutsche Bahn said, and local media reported two people were killed. Deutsche Bahn said in a statement on its website the collision took place at around 9.20 p.m. local time (1920 GMT) near the Aichach station on the line between Ingolstadt and Augsburg in Bavaria. Deutsche Bahn and the Sueddeutsche Zeitung both reported police as saying said two people were killed and several injured.

ரஷ்ய அதிபராக மீண்டும் பதவியேற்ற புதினுக்கு டிரம்ப் வாழ்த்து

Image
ரஷ்ய அதிபராக 4வது முறையாக பதவியேற்ற விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட விளாடிமிர் புதின், 76 புள்ளி 7 சதவீத வாக்குகளைப் பெற்று, வெற்றியடைந்தார்.  இதையடுத்து, நேற்று அவர், 4வது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்றார்.  அவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து கூறியுள்ளதாகவும், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படும் காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக, டிரம்ப் தெரிவித்துள்ளதாகவும், வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. WASHINGTON: US President Donald Trump has congratulated his Russian counterpart Vladimir Putin on being sworn in for a fourth term, saying he looks forward to a time when the two nations can have a good relationship. 

அமெரிக்கா, ஹவாய் தீவு சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுக்கும் எரிமலைக் குழம்பு

Image
Hawaii volcano eruption destroys 35 structures -- and the lava keeps flowing அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை வெடித்து வெள்ளம் போல் நெருப்புக் குழம்புகள் வெளியேறி வருவதால் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகின.  ஹவாயில் உள்ள கிலாயூ (Kilauea)எரிமலை கடந்த வியாழக்கிழமை அன்று சீறத் தொடங்கியது. எரிமலை சீற்றத்தில் இருந்து உயிருக்கு அச்சுறுத்தலான சல்ஃபர் டை ஆக்ஸைடு வாயு அதிகளவில் வெளியேறி வருவதால் நிலைமை மோசமாகி உள்ளது.  எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியது. வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.  இந்த நிலையில் எரிமலையில் இருந்து வெளியேறும் நெருப்புக் குழம்புகள், வீதிகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து, வழியெங்கும் உள்ள கட்டுமானங்களையும், காடுகளையும் சாம்பலாக்கியபடி முன்னேறி வருகிறது. எரிமலைக் குழம்பு சூழ்ந்து கார் ஒன்றை தீக்கிரையாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இரும்பு கேட்டையும் உருக்கிய படி நகரும் நெருப்புக் குளம்புகளால் லெய்லானி எஸ்டேட்ஸ் (Leilani Estates) பகுதியில் 25க்க...

யாழ் மாநகரசபை முதல்வர் தொடர்பில் முன்னணி மௌனம்!

Image
யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல் சபையின் முன் அனுமதி பெற்றிருக்காது தன்னிச்சையாக நடந்துகொள்வதாகக் கூறி அதற்கு எதிராக வடக்கு மாகாண முதலமைச்சர் வரை சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றை (08) யாழ் மாநகசபையின் அமர்வுகளின்போது குறித்த விடயங்கள் தொடர்பில் மௌனம் சாதித்துள்ளனர்.  இன்றைய அமர்வில் முன்னணியினரால் குற்றஞ்சாட்டப்பட்ட நிதிக்குழு உள்ளிட்ட நிலையியற் குழுக்கள் அமைக்கப்பட்டன. குறித்த குழுக்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் பலர் உள்ளாவாங்கப்பட்டனர். இவற்றின்போதும் ஆட்சேபம் எதுவுமின்றி முன்னணி மௌனம் சாதித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சி

Image
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 ரூபாய் 27 காசுகளாக சரிந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 ரூபாய் 13 காசுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 67ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க நேரிடும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. முதலீடுகளும் குறையும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்லாவில் ஆலங்கட்டி மழை

Image
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் ஆலங்கட்டி மழை பெய்தது. டெல்லி, அரியானா, சண்டிகார் பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கி வரும் நிலையில் வடமாநிலங்களில் பரவலாக மோசமான வானிலை நிலவுகிறது.  இமாச்சல பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் தலமான சிம்லாவில் காலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.  பிற்பகலில் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. பனிக்கட்டிகள் சரசரவென விழத் தொடங்கியதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நின்றனர்.

கத்தாரில் திடீர் சோதனையின் போது வியாபார விதி மீறல்களில் ஈடுபட்ட 91 நிலையங்கள் சிக்கின!

Image
கத்தார் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பல்வேறு சட்ட விதி மீறல்களில் ஈடுபட்டிருந்த வியாபார நிறுவனங்கள் சிக்கியுள்ளன. அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது 91 நிறுவனங்கள் மீறல்களில் ஈடுபட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டன.  பொருட்களின் விலைகளை விளம்பரப்படுத்தாமை, அரபுமொழியில் விலைகள் காட்சிப்படுத்தப்படாமை, அனுமதி வழங்கப்படாத பொருட்களை விற்பனை செய்தமை போன்றன முக்கிய குற்றங்களாகும். இவ்வாறு மீறல்களில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது 5000 றியால்கள் முதல்  30000 றியால்கள் வரை அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விற்பனை நிலையங்கள், கடைகள் இது போன்ற மீறல்களில் ஈடுபட்டால் அமைச்சகத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படடுள்ளனர்.

தனுஷ் நாயகியின் திருமணத்தில் திரண்ட பாலிவுட் படவுலகம்

Image
தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஜண்ணா' திரைப்படத்தின் நாயகியும், முன்னணி பாலிவுட் நடிகையுமான சோனம்கபூர், தன்னுடைய காதலர் ஆனந்த் அஜூஜாவை இன்று திருமணம் செய்தார்.  இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த பாலிவுட் திரையுலகமே திரண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள பங்களா ஒன்றில் நடந்த இந்த திருமணத்தில் மணப்பெண் சோனம்கபூர் சிவப்பு நிற உடையில் அழகான தோற்றத்துடன் காணப்பட்டார்.  ஹாலந்து மற்றும் ஸ்வீடன் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட அழகிய பிரமாண்ட மேடையில் இந்த திருமணம் நடந்தது. சீக்கிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் மணமக்கள் அருகில் இருந்த சீக்கிய கோவிலில் மாலை மாற்றி கொண்டனர். இன்று காலை சோனம்கபூர் திருமணம் முடிவடைந்ததை அடுத்து இன்று மாலை மும்பையில் உள்ள லீலா ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வரவேற்பில் பல பாலிவுட் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் வருகை தருவார்கள் என்று கருதப்படுகிறது. இந்த திருமணத்தில் மணமகள் சோனம்கபூரின் பெரியப்பாவும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தனது மகள்களுடன் கலந்து கொண்டார் என்பதும் ஸ்ரீதேவி மறைவி...

விஷால் உறவினர் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் குடும்பத்தினர்

Image
Bhargav committed suicide today morning and this has left his cousin and actor Vishal quite depressed. விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் விஷாலின் உறவினர் பார்கவ் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் விஷால் உள்பட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விஷால் தனது டுவிட்டரில் கூறியபோது, 'உன்னுடைய வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  நான் எனது சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். என்னால் இந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது. நான் உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன்.  நீ இந்த முடிவை ஏன் எடுத்தாய்? உனக்கு எந்த பிரச்சனை இருந்திருந்தாலும் என்னிடம் கூறியிருந்தால் நான் தீர்த்து வைத்திருப்பேன்' என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார். Bhargav.i wish u didn't end your https://t.co/YD4je0JFfH way.i lost my own brother.i will Neva get over this guilt.i am https://t.co/gXNAjsHFQO btw all this chaos. I take to Twitter to say I miss u man.why the hell.i wud hav sorted out your issue...

மீண்டும் சர்ச்சையை உண்டுபண்ணும் ஸ்ரீரெட்டியின் செக்ஸ் : சிக்கலில் முக்கிய நடிகர் !

Image
Sri Reddy has now targeted Nani. Earlier, she commented against him but stopped short of mentioning his name. She merely said Natural actor. She has accused him of ‘showing hell’ to a girl for the whole day. சமீபகாலமாக தெலுங்கு உலகில் பாலியில் தொல்லைகலை கொடுக்கும் பிரபலங்களை பற்றி நடிகை ஸ்ரீரெட்டி யார் என்பதை வெளியீட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் னானை ஒரு பெண்ணை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் "நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த பெண் யாரென்று அவர் குறிப்பிடவில்லை. இந்த குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நானி இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் தேர்வு

Image
ஆர்மோனியாவின் பிரதமராக இருந்த சர்கிசியான் மக்கள் எதிர்ப்பு காரணமாக இராஜிநாமா செய்த நிலையில், புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான் இன்று பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார். செர்ஸ் சர்கிசியானின் அதிகாரத்தை வலுப்படுத்தவே ஆளும்கட்சியினர் அவரை பிரதமராக தேர்வு செய்ததாக எதிர்க்கட்சிகள் கருதின. பிரதமர் பதவிக்கு வந்தவுடன் ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரங்களை பிரதமருக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட செர்ஸ் சர்கிசியான், பாராளுமன்ற ஆட்சிமுறையை ஆர்மோனியாவில் கொண்டு வர முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். பிரதமர் பதவியிலிருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் என எதிர்க்கட்சியினருடன் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்கட்சி தலைவர் நிக்கோல் பாஷின்யான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

‘காலா’ பட இசை வெளியீடு நாளை

Image
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 8,500பேருக்கு இவ்விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கியுள்ள படம் ‘காலா’. இதை தனுஷ் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது. அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை மாலை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் ரஜினிக்கு நெருக்கமான முக்கிய திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள். அதோடு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மொத்தம் 8,500பேருக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. விழாவில் ரஜினி தனது ‘காலா’ பட அனுபவங்கள், படத்தில் இடம்பெற்றுள்ள 9பாடல்கள் தொடர்பான சுவாரஸ்ய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதோடு, முக்கிய அரசியல் விடயங்கள் குறித்தும் பேசுவார். கட்சி நிர்வாக...

பதற வைக்கும் கோர விபத்து - ஸ்தலத்தில் பலியான தம்பி, உயிர் தப்பிய அக்கா (VIDEO)

Image
புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். இந்த விபத்து புத்தளம் - கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது சகோதரியுடன் நாகவில்லுவ பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றுக்கு சென்று மீண்டும் வெளியே வரும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வேன் வாகனத்தின் சாரதி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தலில் 883கோடீஸ்வரர்கள், 645குற்றவாளிகள் போட்டி

Image
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883கோடீஸ்வரர்கள், 645 குற்றவாளிகள் போட்டியிடுவதாக “தி இந்து” ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கர்நாடக சட்டப் பேரவைக்கு எதிர்வரும் 12ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 224சட்டப் பேரவைத் தொகுதிகளில் 223தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பெங்களுர் ஜெயநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் விஜயகுமார் இறந்து விட்டதால் அத்தொகுதியில் மட்டும் தேர்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 883கோடீஸ்வரர்கள் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். கர்நாடகாவில் மொத்தம் களத்திலுள்ள வேட்பாளர்களில் 645வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. இதில் 254பேர் மீது மோசமான குற்றவியல் வழக்குகளும், 391பேர் மீது சாதாரண குற்றவியல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. 223பா.ஜ.க. வேட்பாளர்களில் 20வேட்பாளர்கள் ஒரு கோடி ரூபாவுக்கு அதிகமான சொத்து வைத்திருப்பவர்களாக உள்ளனர். அதேபோல 220காங்கிரஸ் வேட்பாளர்களில் 207பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 199 மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களில் 154பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொத்தமுள்ள 1,090சுயேட்...

சுவிசில் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவினை முன்னிட்டு, 22வது விளையாட்டுப் போட்டிகள் - 20.05.2018

Image

குதிக்கால் காலணியால் பலியான குழந்தை

Image
மும்பையில் உயர் குதிக்கால் காலணி (ஹீல்ஸ்) அணிந்திருந்த பெண் தடுக்கி விழுந்ததில் அவரது கையிலிருந்து தவறி விழுந்த 6மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மும்பையின் கல்யாண் பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள பெமிதா ஷேக் என்ற இளம் பெண் தனது கைக்குழந்தையுடன் சென்றிருந்தார். அவர் மிக உயரமான குதிக்கால் காலணி (ஹீல்ஸ்) அணிந்திருந்த நிலையில், நடக்கும் போது தடுக்கி விழுந்துள்ளார். அப்போது குதிக்கால் காலணி தடுக்கி நிலை தடுமாறி அவர் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பெமிதாவிற்கு தலையில் சிறியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் 6மாத குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கல்வீச்சில் இளைஞன் பலி

Image
காஷ்மீரில் நடந்த கல்வீச்சில் படுகாயமடைந்த சென்னை இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். காஷ்மீரில் சில நாட்களுக்கு முன்னர் 5தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர பொதுமக்களில் ஒருவர் இறந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஸ்ரீநகரின் புறநகர் நர்பால் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில், காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சென்னை இளைஞர் ஆர்.திருமணி (வயது-22) தலையில் படுகாயமடைந்தார். பாதுகாப்புப் படையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இத்தகவலை பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்தவரின் குடும்பத்தினரை, முதல்வர் மெஹபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாலியல் வன்கொடுமைக்கு பெண்களின் ஆடை காரணமென்பது முட்டாள் தனம்

Image
பலாத்கார சம்பவங்களுக்கு பெண்கள் அணியும் ஆடைகள் தான் காரணம் எனக்கூறுவது முட்டாள் தனமானது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் ஆடை தான் காரணம் எனில் குழந்தைகள், முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏன் இடம்பெறுகின்றது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாலின பாகுபாடு தொடர்பான ஆய்வறிக்கை குறித்த பிக்கி அமைப்பின் கருத்தரங்களில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணுக்கு தெரிந்த நபரே அவரை பாலியல் வன்கொடுமை செய்தால் அதை எவ்வாறு வெளி நபர்களால் தடுக்க முடியும். ஆடை காரணமாகவே பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். நான் அவர்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். ஆடை தான் காரணமென்றால் முதியவர்களுக்கும், குழைந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை ஏற்படுவது ஏன்? இதுபோன்று ஒவ்வொரு 10பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 7சம்பவங்கள் அதில் பாதிக்கப்பட்டவருக்கு மிக நெருக்கமானவர்களால் ஏற்படுத்தப்படுவது தான். இவ்விவகாரத்தில் சட்டம்...

UAE மழலையர் பள்ளிக்கூட தீ விபத்து! 176 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

Image
அமீரகம், ராஸ் அல் கைமா மழலையர் பள்ளிக்கூட தீவிபத்திலிருந்து 176 மாணவர்களும் மீட்கப்பட்டனர் ராஸ் அல் கைமாவின் அல் தஹான் பகுதியில் செயல்படும் அல் உரூத் கின்டர்கார்டன் எனும் மழலையர் பள்ளிக்கூடத்தில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக களத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அனைத்து மாணவச் செல்வங்களையும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் வெற்றிகரமாக மீட்டனர் அல்ஹம்துலில்லாஹ். இத்தீவிபத்து ஏற்படும் போது 176 மாணவ மாணவிகளும், 20 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், 5 துப்புரவாளர், 2 பாதுகாவலர்கள் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் எத்தகைய காயங்களுமின்றி மீட்கப்பட்டனர் என்றும் இவர்களில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து மீட்கப்பட்டவர்கள் மாணவர்களே என்றும் ராஸ் அல் கைமா தீயணைப்புத்துறையின் துணை இயக்குனர் காலனல். அலி அல் மஹ்பூபி அவர்கள் தெரிவித்தார். (இதுபோல் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கும்பகோணம் தீ விபத்தில் 94 பிஞ்சுகள் கருகி இருக்காதே என மனம் வலியுடன் பின்னோக்கிப் சென்றது) தண்ணீர் மற்றும் ஃபோம் நுரை (Water & Foam) கொண்டு தீ முற்ற...

மோடியை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு மாரடைப்பு

Image
பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23ம் தேதி பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டு லாரி உரிமையாளருடன் போனில் பேசியவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (53). அப்போது, இவர் பேசியது சமூக வலையதளங்களில் வைரலாகி வந்தது. இதன் காரணமாக, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்,சிறையில் இருந்த முகமது ரபீக்கிற்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரபீக், கோயம்புத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கூட ரபீக் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கோயம்புத்தூரில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இவர் தான் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

வாகன விபத்தில் சிறுவன் சாவு

Image
புத்தளம் – கொழும்பு பாலாவி தல்கஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.  பாலாவி சிங்கள வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் டபிள்யூ.அசித்தசஞ்சீவ (12 வயது) என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.  கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சென்றுகொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளானது. எனத் தெரிவிக்கப்பட்டது.  வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கத்தின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளார்.  விபத்துடன் தொடர்புடைய வாகனசாரதி, விபத்தை ஏற்படுத்திவிட்டு அவ்விடத்தை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில், புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்குப் பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

Image
“தொழில் உரிமையாகும்“ என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னால் சற்றமுன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அனைத்துப் பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரி தமிழ் மற்றும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு அவர்கள் ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லெப் கேணல் கலையழகனின் தாயார் காலமானார்!

Image
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்க்காக வீர புதல்வன் லெப் கேணல் கலையழகனை பெற்றெடுத்த தாய் சிவபாதசுந்தரம் மங்கையற்கரசி அவர்கள் நேற்று காலமானார்,  அவரது இறுதி நிகழ்வுகள் இன்று நடை பெறுகிறது. அனைத்துலகத் தொடர்பாக துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகன் முல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை மிரட்டி பலவந்தமாக அழைத்து சென்ற அய்யூப் அஸ்மீன்!

Image
யாழ்ப்பாணத்தில் நெல்லியடி பகுதியில் நடைபெற்று முடிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினக்கூட்டத்திற்கு ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் பலவந்தமாகவே கோலாட்டம் நிகழ்விற்கு அழைத்து செல்லப்பட்டதாக அதிபர் சேகு குறிப்பிட்டார். மாணவர்கள் வெயிலில் வாடுவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு அதிபரை தொடர்பு கொண்ட ஊடகவியலாளரிடம் அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சம்பவ தினத்தன்று நேரம் ஒரு மணிக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிகழ்வு ஒன்றிற்கு (எந்த நிகழ்வு என்று சொல்லவில்லை) மாணவர்களின் கோலாட்டம் தேவை என கூறினார்.ஆனால் அதை மறுத்த நான் மாணவர்களை அனுமதிக்க முடியாது என தொலைபேசியை துண்டித்து விட்டேன்.தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாகாண சபை உறுப்பினர் மிரட்டும் பாணியில் என்னுடன் நடந்து கொண்டார். இதற்கு நான் அஞ்சவில்லை.மாணவர்களை குறித்த நிகழ்விற்கு அனுப்பமுடியாது என கூறினேன்.ஆனால் தொலைபேசி துண்டிக்கபப்ட்டதும் பாடசாலை முன்றலில் வெள்ளை வேன் ஒன்று வந்தது.அதில் டொபாஸ் கடை நடாத்தும் நஸ்லீன் குழு வந்து என்னிடம் கேட்காது மாணவர்களை கடத்தி சென்றது எ...

புதிய அரசியல் யாப்பு:பூச்சாண்டியுடன் மாவை!

Image
தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் யாப்பை தயாரிக்கும் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் மீள ஆரம்பிக்கப்படும் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை நாட்டை பிளவுபடுத்தும் என்று தெற்கில் மஹிந்த அணியினர் பிரசாரப்படுத்திவரும் நிலையில், தமிழர் தாயகத்திலுள்ள சில தமிழ் கட்சிகள் இடைக்கால அறிக்கையால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது என்று பிரசாரம் செய்து வருவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாராசா குற்றம்சாட்டியுள்ளார். எனினும் புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவிக்கும் மாவை சேனாதிராஜா அதனாலேயே அந்தப் பணிகளை மீண்டும் உடனடியாக ஆரம்பிக்குமாறு சிறீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்ப...

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு!

Image
பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் உள்துறை அமைச்சரான அஹ்சன் இக்பால் (59). காயமடைந்துள்ளார். இலக்கு தவறி துப்பாக்கிக் குண்டு அவரது வலது கையைக் காயப்படுத்தியுள்ளது. நேற்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்கு உட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது கூட்டத்திலிருந்து எழுப்பிய  இளைஞன் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுடுள்ளார். துப்பாக்கியால் சுட்ட இளைஞன் அபித் உசேன் (21) என்ற  அடையாளம் காணப்ப்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்துறை அமைச்சர் அஹ்சன் இக்பாலுக்கு நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புள்ள அசீம் என்கிற காஷி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இளவரசர் ஹரி திருமணத்திற்கு வருவோர் உணவுடன் வருமாறு வேண்டுகோள்!!

Image
பிரித்தானியா இளவரசர் ஹரி - ஹாலிவுட் நடிகை மேகன் மார்க்லே திருமணம் வரும் 19-ம் தேதி வின்ஸ்டர் காஸ்டில் என்ற இடத்தில் நடக்க உள்ளது. அரச குடும்ப திருமணத்திற்கு குறிப்பிட்ட பலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். முக்கிய வி.ஐ.பிகள் தவிர்த்து பொதுமக்களில் சிலருக்கும் அழைப்பிதழ்கள் செல்லும். இதில் பிரிவு 1, பிரிவு 2 என இரு வகை உண்டு. இந்த பொதுமக்களில் இளவரசர் ஹாரியுடன் படித்தவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என 600 பேர் முதல் பிரிவில் வருகின்றனர். இவர்களுக்கு சிற்றுண்டி மட்டும் வழங்கப்படும். இரண்டாவது பிரிவில் 1200 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் வழங்கப்படாது. "திருமணத்திற்கு வரும் போது உணவு, குடிநீர் கொண்டு வரவேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமணத்திற்கு அழைக்கப்பட்டாலும் இவர்கள் மணமக்களை அருகிலிருந்து கூட பார்க்க முடியாது. அங்குள்ள புல்தரையில் இவர்கள் அமரவைக்கப்படுவார்கள். பால்கனியில் நின்று கொண்டு திருமண ஜோடி முத்தமிடுவதை இவர்கள் பார்க்கலாம். சாப்பாடு போடாவிட்டாலும் மக்கள் கொண்டு வரும் பரிசுப்பொருட்களை அரச குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று

Image
எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.  இது சம்பிரதாயபூர்வ அமர்வாக இடம்பெறுவதுடன், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார். சம்பிரதாயபூர்வ அமர்வு என்பதால் முப்படையினரின் அணிவகுப்புடன் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு அழைத்து வரவுள்ளார். அரசியலமைப்புக்கு அமைய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து உரையாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஜனாதிபதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் வழங்கப்படும். கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ஒத்திவைத்து 8 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. துறைசார் மேற்பார்வைக் குழு, தெரிவுக்குழு மற்றும் உயர் பதவி குழு தவிர்...

தெற்காசியப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா விளையாட்டு வீரனுக்கு பலத்த வரவேற்பு!

Image
தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்று வடமாகாணத்திற்கும், வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர் சிவானந்தன் கிந்துசன் இன்று (07.05.2018) பிற்பகல் 1.00 மணியளவில் தனது சொந்த இடமான வவுனியா புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியதும் வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்களால் மலர் மாலை அணித்து வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த கிந்துசன்., கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளேன். இதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன் எனது இலட்சியம் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதற்கென்றே எண்ணியிருந்தேன். எனக்கு பயிற்றுவித்த நவனீதன் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள், எமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எமக்கு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்...

வறட்சியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு.!

Image
வறட்சியான காலநிலை தொடர்வதால் யாழில் வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. இந்த நிலையில், இளவாழை, மாதகல் மற்றும் உறும்பிராய் பகுதிகளில் வெங்காய பயிர்ச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், தமது பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் பெறப்பட்ட வங்கிக்கடன்களை செலுத்துவதற்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு அந்த பகுதி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், விவசாயிகள் விளை நிலங்களில், கடந்த வருடம் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும், உரிய காலத்தில் விதை உருளைக்கிழங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த வருடம் மாற்றுபயிர்ச் செய்கையாக வெங்காயத்தை பயிரிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

’2020இல் ஓய்வுப்பெற போவது இல்லை’ ஜனாதிபதி.!

Image
"2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற போவது இல்லை" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான, மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி - மாவடி வேம்பில் நடைபெறுகின்றது. 'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி "சிலர் தம்மிடம் 2020இல் ஓய்வுபெற போகிறீர்களா? எனக் கேட்பதாகவும், சில ஊடகங்களும் 2020இல் தாம் ஓய்வு பெறபோவதாக செய்திகளை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். எனினும் 2020இல் தாம் ஓய்வுபெற போவது இல்லை எனவும், நாட்டுக்கு ஆற்றவேண்டிய பணிகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் கோழி வளர்ப்பிற்கு வரி செலுத்தும் பொதுமக்கள்.!

Image
வவுனியாவில் கோழி வளப்போர்கள் மீது பிரதேச சபையினரால் அரச வரி அறவிடப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்காரணமாக சுயதொழிலான கோழி வளர்ப்பினைக் கைவிட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டடோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வடமாகாண சபை தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மேலும் தெரிவிக்கும்போது, கடந்த சில தினங்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களினால் சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம் பகுதிகளில் கோழி வளர்ப்பினை மேற்கொள்ளும் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கோழி வளர்ப்பினை மேற்கொண்டு வருபவர்களுக்கு வரி அறிவீடு செய்து வருகின்றனர். சுயதொழில் மேற்கொள்ளும் வறிய மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக இவ்வாறு கோழி வளர்ப்பினை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கிடைக்கும் வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாணசபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதற்காகத் தெரிவித்து கோழிகளை வழங்கிவிட்டு தற்போது பி...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Image
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கொண்டு வந்த பெண்...

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

Image
வரட்சியின் காரணமாக யாழ்ப்பாணத்தில் வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளது. இளவாழை, மாதகல் மற்றும் உறும்பிராய் பகுதிகளில் வ...

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

Image
கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இருவர் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவர்களை கடந்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 9 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் மாலை 7 மணிவரையிலான கால பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரால் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கைதிகளின் தலைப்பகுதி மற்றும் நெஞ்சுப்பகுதியில் துப்பாக்கி காயங்கள் காணப்பட்டமையினால் திட்டமிடப்பட்ட செயல் என விசாரணைகளின் வாயிலாக நீதிமன்றம் கருதியது. இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் வெலிக்டை சிறைச்சாலை ஆணையாளராக செயற்பட்டு வந்த எமில்...

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு கொடுந்துயரை நினைவில் சுமப்போம் - 18.05.2018

Image

பிக் பாஸ் 2 நிகச்சியில் ரஷ்மி ராய் : விபரம் உள்ளே

Image
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது பிக்பாஸ் 2. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குகிறார், இதனால் ரசிகர்களும் படு ஆவலோடு இருக்கின்றனர். முதல் சீசனை போல் இதில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சமூக வலைதளத்தில் பிக்பாஸ் 2 வில் பங்குபெறுபவர்களின் பட்டியல் என்று ஒரு விவரம் வைரலாகிறது. ஆனால் அதைப் பார்த்தால் தவறான தகவல் என்பது நன்றாகவே தெரிகிறது. இதோ வைரலாக சுற்றும் அந்த பட்டியல், இனியா கஸ்தூரி ராய்லக்ஷ்மி லட்சுமி மேனன் ஜனனி ஐயர் சுவர்ணமால்யா பூனம் பாஜ்வா ப்ரியா ஆனந்த் நந்திதா பரத் ஷாம் சாந்தனு அசோக் செல்வன் ஜித்தன் ரமேஷ் ஜான் விஜய் படவா கோபி பவர் ஸ்டார் ப்ரேம்ஜி யூகி சேது விஜய் வசந்த் நாஞ்சில் சம்பத் பால சரவணன் ப்ளாக் பாண்டி சாரு நிவேதா தாடி பாலாஜி டேனியல் ஆனி போப் ஆலியா மானசா ரக்ஷிதா கீர்த்தி சாந்தனு அமித் பார்கவ்

பிளாஸ்டிக் பையில் அழகு பெண் குழந்தை..! புதரில் வீசப்பட்ட கொடுமை

Image
சேலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை பிளாஸ்டிக் சாக்கு பையில் சுற்றி புதரில் வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் அரபிக் கல்லூரி அருகே ஞாயிற்றுகிழமை இரவு குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. அந்தவழியாக சென்றவர்கள் டார்ச் வெளிச்சத்தில் தேடியபோது அங்கு குழந்தை ஏதும் தென்படவில்லை. பச்சிளம் குழந்தையின் அழுகுரல் நீடித்ததால் ,அந்த வழியாக சென்ற மாதேஸ்வரன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து தேட தொடங்கி உள்ளார். சத்தம் வந்த புதர் பகுதியில் தேடியபோது மேலே கற்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிளாஸ்டிக் சாக்கு பை ஒன்றில் இருந்து லேசாக அசைவுகள் தென்பட்டுள்ளது. இதையடுத்து அதன்மேல் இருந்த கற்களை அகற்றிவிட்டு அந்த பையை திறந்து பார்த்த போது, உள்ளே தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கதறி அழுவதைக் கண்டு பதறி போயுள்ளனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த 108 பணியாளர்கள் அந்த பிளாஸ்டிக் சாக்குப்பயை கிழித்து குழந்தையை பத்திரமாக மீட்டு சேலம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்...

மே18, சிதறடிக்கவேண்டாமென கோரிக்கை!

Image
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடந்த ஆண்டுகள் போல் முடக்கிவைத்திருக்க வடமாகாணசபை முற்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாணசபையினால் இம்முறையும் முன்னெடுக்கப்படுமென வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ள நிலையில் இன்றிரவு மாணவர் ஒன்றியம் குறித்த ஊடக அறிக்கையினை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் கடந்த பல வாரங்களாக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தோம். கடந்த ஆண்டுகளில் இந்நிகழ்வுகளை தனித்தியாக நடாத்தியவர்களோடு உரையாடி ஒற்றுமையாக ஒரேநிகழ்வாக நடாத்துவதற்கான எமது முயற்சிகள் ஆங்காங்கே இடறுப்பட்டாலும் முன்னேற்றகரமாகவே அமைந்திருந்தது. பல்வேறு அரசியல் செயற்பாட்டுக் குழுக்களும் அமைப்புக்களும் எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன. கடந்த ஆண்டு நிகழ்வுகளை நடாத்திய தரப்புக்கள்கூட தமது ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. ஆனால் இந்நிலையில் வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்த கதையாக தற்போது வடமாகாணசபை தாமே ...