Posts

தென்னாபிரிக்காவில் சிறுவனைத் தின்றது சிறுத்தை

Image
தென் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா மிகவும் பிரசிதி பெற்றது. இந்த பூங்காவில் பணிபுரியும் வனத்துறை அதிகாரிகளின் குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர்.  அங்கு வேலைப்பார்க்கும் பெண் வனத்துறை அதிகாரியின் 3 வயது மகன் தனது பாட்டியுடன் இருந்தார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை தனியே வீட்டினுள் விட்டுவிட்டு பாட்டி வெளியே சென்றுள்ளார்.  பாட்டியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் பாதுகாப்பில்லாத இடத்திற்கு சென்றுவிட்டான். அப்போது திடீரென அங்கு வந்த சிறுத்தை சிறுவனை கடித்து இழுத்து சென்றது. சிறுவனின் அழுகுரல் கேட்டு வந்த பாட்டி சிறுத்தை இழுத்துச் செல்வதை கண்டார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அடுத்த நாள் சிறுவனின் எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது. சிறுத்தையானது சிறுவனை கடித்து தின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடியிருப்பு பகுதியை சுற்று பாதுகாப்பு வேலி போடப்படாமல் இருந்ததே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும், சிறுவனை கொன்ற சிறு...

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

Image
சமீபத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடைய அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து மிகவிரைவில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் பிக் பாஸ் 2 வில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றி இன்னும் அவர் வாய்திறக்கவில்லை, ஏனென்றால் ஒப்பந்தம் படி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால் அவர் நெருங்கிய வட்டாரத்தில் அவருக்கு அழைப்பு வந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.

முதலமைச்சருடன் நெருங்கும் முஸ்லீம் பிரதிநிதிகள்!

Image
தமிழரசுக்கட்சியின் முகவராக செயற்படும் வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மினை புறந்தள்ளி முதலமைச்சருடன் நெருக்கமான உறவை பேண முஸ்லீம் தரப்புக்கள் தயாராகிவருகின்றன. வடமாகாண முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது முன்னின்று செயற்பட்டவர்களுள் அஸ்மினும் ஒருவராவார். இந்நிலையில் வடக்கு முஸ்லீம்கள் தொடர்பில் முதலமைச்சர் அக்கறையுடன் செயற்படவில்லையென அஸ்மின் பிரச்சாரங்களை முஸ்லீம்களிடையே மேற்கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 04 ம் திகதி வெள்ளிக்கிழமை அஸ்மினிற்கு எதிராக  முஸ்லீம்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன்; உருவப் பொம்மையும்  எரிக்கப்பட்டிருந்தது. இந்த உருவப் பொம்மை எரிப்பை முழுக்க யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களே செய்தனர்.இந்த விடயத்தை அரசியலாக்க தற்போதைய மாகாண சபை போனஸ் உறுப்பினர் அயூப் அஸ்மீன்; மக்களை தவறான வழியில் திசை திருப்பமுற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே வடக்கில் மீளக்குடியேறிய முஸ்லீம் மக்களது சார்பு பிரதிநிதிகள் முதலமைச்சருடன் நெருக்கமான உறவை பேணும் வகையில் சந்திப்பினை நடத்தியுள்ளனர். 

எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா திருமணம்! சர்ச்சையான நேரத்தில் உண்மையை வெளியிட்ட பிரபலம்

Image
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்று முடிந்து. நீண்ட நாளாக பெண் தேடி வந்த ஆர்யா இதன் மூலம் தன் வாழ்க்கை துணையை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் இருந்த சீதா, சுசானா, அபர்ணதி என மூன்று போட்டியாளர்களில் ஒருவரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது பலருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஆர்யா மற்றும் நிகழ்ச்சி குழு பல புகார்கள் எழுந்தது. சமீபத்தில் அவரை இதை வைத்து கிண்டல் செய்தனர். இந்நிலையில் இதன் போட்டியளர்களில் ஒருவரான அபர்ணதி உண்மையை வெளியிட்டுள்ளார். keerthi suresh new hot pic ஆர்யா ஒரு கேடி. அவனுடய குணங்கள் எனக்கு பிடித்தது. தன் முடிவால் மற்ற யாரையும் சங்கடப்படுத்தி விடக்கூடாது என இருந்தான். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அவன் திருமணம் செய்துகொள்ளவே வந்தான். ஆனால் அவனுக்கு தன் சொந்த வாழ்கையில் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஒருவேளை யாரையாவது திருமணம் செய்துகொண்டால் அந்த துணையும் நம்மோடு சிரமப்படவேண்டுமா என நினைத்ததால் தான் யாரையும் அவன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் இப்போதைக்கு திருமணம் செய்ய விரும்பவில்லை. ஒருவேளை இறுதியில் முடிவை என்னிடம் கொடுத...

ரொமான்ஸ் மோடில் அஜித், நயன்தாரா – 'விஸ்வாசம்' அப்டே

Image
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்குகிறார்.  இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விஸ்வாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.  டி.இமான் இசையமைக்கும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கியது. இந்நிலையில், இன்று (மே 8-ஆம் தேதி) முதல் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்.

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?

Image
யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டை புறந்தள்ளி சபையினை மதியாது முன்னாள் ஈபிடிபி சார்பு முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. யாழ்.மாநகர சபைக்கான வேட்பாளராக போட்டியிட யோகேஸ்வரி பற்குணராசா முன்னர் விருப்பம் கொண்டிராத நிலையில் பின்னர் பட்டியல் மூலம் உள்ளே புகுந்திருந்தார். இந்நிலையில் சபையின் மாண்பைப் பேணும் வகையில் யோகேஸ்வரி பற்குணராசா செயற்படுவதில்லையென யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், கூற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் இரண்டாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை சபை மண்டபத்தில் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றிருந்தது.  இதன்போது, கடந்த அமர்வின் கூட்ட அறிக்கையில்; ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என முன்னாள் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தனது கருத்தை தனது இருக்கையில் அமர்ந்தவாறு தெரிவித்தார். வேலுப்பிள்ளை பிரபாகரனிற்கு சிலை வைப்பதில் கூட ஈபிடிபிக்கு ஆட்சேபனையில்லையென தெரிவித்த அவர் எழுந்து நின்று சபையில் வாதிடவேண்டியதில்லையெனவும் வாதி...

கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்துக்காக தாமதம் : மு.க.ஸ்டாலின்

Image
கர்நாடக தேர்தலில் பாஜகவின் லாபத்துக்காக தமிழகத்தின் காவிரி உரிமையை பாதுகாத்து நீதி வழங்குவதில் செய்து வரும் தாமதம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குறைப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கி துணை செய்திருப்பது, உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்புக்கே மாறான நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.  காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்த விடாமல் இதுவரை தடுத்து வரும் மத்திய பாஜக அரசுக்கும், அதனுடன் இணைந்து செயல்பட்ட அதிமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.  வரும் 14 ஆம் தேதி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, இறுதி தீர்ப்பின் பலனை தமிழக விவசாயிகள் அனுபவிப்பார்களா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உச்சநீதிமன்றம் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.