கத்தாரில் திடீர் சோதனையின் போது வியாபார விதி மீறல்களில் ஈடுபட்ட 91 நிலையங்கள் சிக்கின!

கத்தார் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பல்வேறு சட்ட விதி மீறல்களில் ஈடுபட்டிருந்த வியாபார நிறுவனங்கள் சிக்கியுள்ளன. அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கடந்த ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட சோதனைகளின் போது 91 நிறுவனங்கள் மீறல்களில் ஈடுபட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டன. 

பொருட்களின் விலைகளை விளம்பரப்படுத்தாமை, அரபுமொழியில் விலைகள் காட்சிப்படுத்தப்படாமை, அனுமதி வழங்கப்படாத பொருட்களை விற்பனை செய்தமை போன்றன முக்கிய குற்றங்களாகும். இவ்வாறு மீறல்களில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது 5000 றியால்கள் முதல்  30000 றியால்கள் வரை அபராதங்கள் விதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

விற்பனை நிலையங்கள், கடைகள் இது போன்ற மீறல்களில் ஈடுபட்டால் அமைச்சகத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படடுள்ளனர்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல்