சிம்லாவில் ஆலங்கட்டி மழை
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் ஆலங்கட்டி மழை பெய்தது. டெல்லி, அரியானா, சண்டிகார் பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கி வரும் நிலையில் வடமாநிலங்களில் பரவலாக மோசமான வானிலை நிலவுகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் தலமான சிம்லாவில் காலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
பிற்பகலில் ஆலங்கட்டி மழை பெய்யத் தொடங்கியது. பனிக்கட்டிகள் சரசரவென விழத் தொடங்கியதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நின்றனர்.

Comments
Post a Comment