ரொமான்ஸ் மோடில் அஜித், நயன்தாரா – 'விஸ்வாசம்' அப்டே


‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்குகிறார். 

இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விஸ்வாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடவுள்ளார். மேலும், காமெடியில் கலக்க யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். 

டி.இமான் இசையமைக்கும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதன் ஷூட்டிங் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கியது. இந்நிலையில், இன்று (மே 8-ஆம் தேதி) முதல் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படம் இந்தாண்டு (2018) தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகுமாம்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?