ரஷ்ய அதிபராக மீண்டும் பதவியேற்ற புதினுக்கு டிரம்ப் வாழ்த்து
ரஷ்ய அதிபராக 4வது முறையாக பதவியேற்ற விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட விளாடிமிர் புதின், 76 புள்ளி 7 சதவீத வாக்குகளைப் பெற்று, வெற்றியடைந்தார்.
இதையடுத்து, நேற்று அவர், 4வது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்றார்.
அவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து கூறியுள்ளதாகவும், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படும் காலத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக, டிரம்ப் தெரிவித்துள்ளதாகவும், வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
WASHINGTON: US President Donald Trump has congratulated his Russian counterpart Vladimir Putin on being sworn in for a fourth term, saying he looks forward to a time when the two nations can have a good relationship.

Comments
Post a Comment