தெற்காசியப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா விளையாட்டு வீரனுக்கு பலத்த வரவேற்பு!


தெற்காசிய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்று வடமாகாணத்திற்கும், வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர் சிவானந்தன் கிந்துசன் இன்று (07.05.2018) பிற்பகல் 1.00 மணியளவில் தனது சொந்த இடமான வவுனியா புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியதும் வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்களால் மலர் மாலை அணித்து வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கிந்துசன்.,

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் சுவட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளேன். இதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன் எனது இலட்சியம் தேசிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுவதற்கென்றே எண்ணியிருந்தேன். எனக்கு பயிற்றுவித்த நவனீதன் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள், எமது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு எமக்கு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கிடைத்துள்ளார் அவருக்கு மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும், விளையாட்டு அமைச்சினால் எமது பயிற்றுவிப்பாளருக்கு எவ்விதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை, எமது வீரர்களுக்கு எமது பயிற்றுவிப்பாளர் இலவச சேவையினையே மேற்கொண்டு வருகின்றார்.

மேலும் அவருக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் மேலும் பல திறமையான விளையாட்டு வீரர்களை எமது மாவட்டத்தில் உருவாக்க முடியும் என தான் நம்பவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?