பள்ளிக் கல்வித்துறை அனுமதியின்றி சுற்றுலா செல்லக் கூடாது : புதிய உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி சுற்றுலா செல்ல கூடாது என மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் புனேவுக்கு சுற்றுலா சென்றபோது 3 பேர் நீர்நிலையில் மூழ்கி பலியானார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வானிலை அறிக்கை மூலம் சுற்றுலா இடம் தேர்வு செய்தல், சுற்றுலா 4 நாட்கள் மிகாமல் இருக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தி இருக்கிறது. 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான உணவு, இடம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
மலையேற்றம் இருப்பின் வனத்துறை அனுமதி மற்றும் வழிகாட்டியுடன் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆறு, ஏரி, குளம், கடல், அருவி ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment