UAE மழலையர் பள்ளிக்கூட தீ விபத்து! 176 மாணவர்கள் பத்திரமாக மீட்பு!

அமீரகம், ராஸ் அல் கைமா மழலையர் பள்ளிக்கூட தீவிபத்திலிருந்து 176 மாணவர்களும் மீட்கப்பட்டனர்

ராஸ் அல் கைமாவின் அல் தஹான் பகுதியில் செயல்படும் அல் உரூத் கின்டர்கார்டன் எனும் மழலையர் பள்ளிக்கூடத்தில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக களத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் அனைத்து மாணவச் செல்வங்களையும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் வெற்றிகரமாக மீட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

இத்தீவிபத்து ஏற்படும் போது 176 மாணவ மாணவிகளும், 20 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், 5 துப்புரவாளர், 2 பாதுகாவலர்கள் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் எத்தகைய காயங்களுமின்றி மீட்கப்பட்டனர் என்றும் இவர்களில் முதலில் முக்கியத்துவம் கொடுத்து மீட்கப்பட்டவர்கள் மாணவர்களே என்றும் ராஸ் அல் கைமா தீயணைப்புத்துறையின் துணை இயக்குனர் காலனல். அலி அல் மஹ்பூபி அவர்கள் தெரிவித்தார்.

(இதுபோல் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கும்பகோணம் தீ விபத்தில் 94 பிஞ்சுகள் கருகி இருக்காதே என மனம் வலியுடன் பின்னோக்கிப் சென்றது)

தண்ணீர் மற்றும் ஃபோம் நுரை (Water & Foam) கொண்டு தீ முற்றிலும் அணைக்கப்பட்டதுடன் இறுதியாக, தீயால் சூழ்ந்திருந்த புகை நவீன கருவி கொண்டு உறிஞ்சப்பட்டு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு ஏற்படுவதிலிருந்தும் தடுக்கப்பட்டது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?