டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 ரூபாய் 27 காசுகளாக சரிந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 ரூபாய் 13 காசுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 67ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய்க்கு கூடுதல் விலை கொடுக்க நேரிடும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. முதலீடுகளும் குறையும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Comments
Post a Comment