தனுஷ் நாயகியின் திருமணத்தில் திரண்ட பாலிவுட் படவுலகம்


தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஜண்ணா' திரைப்படத்தின் நாயகியும், முன்னணி பாலிவுட் நடிகையுமான சோனம்கபூர், தன்னுடைய காதலர் ஆனந்த் அஜூஜாவை இன்று திருமணம் செய்தார். 

இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த பாலிவுட் திரையுலகமே திரண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் உள்ள பங்களா ஒன்றில் நடந்த இந்த திருமணத்தில் மணப்பெண் சோனம்கபூர் சிவப்பு நிற உடையில் அழகான தோற்றத்துடன் காணப்பட்டார். 

ஹாலந்து மற்றும் ஸ்வீடன் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட அழகிய பிரமாண்ட மேடையில் இந்த திருமணம் நடந்தது. சீக்கிய முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் மணமக்கள் அருகில் இருந்த சீக்கிய கோவிலில் மாலை மாற்றி கொண்டனர்.

இன்று காலை சோனம்கபூர் திருமணம் முடிவடைந்ததை அடுத்து இன்று மாலை மும்பையில் உள்ள லீலா ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வரவேற்பில் பல பாலிவுட் பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் வருகை தருவார்கள் என்று கருதப்படுகிறது.

இந்த திருமணத்தில் மணமகள் சோனம்கபூரின் பெரியப்பாவும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தனது மகள்களுடன் கலந்து கொண்டார் என்பதும் ஸ்ரீதேவி மறைவிற்குக் பின்னர் அவர் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?