பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு!

பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் உள்துறை அமைச்சரான அஹ்சன் இக்பால் (59). காயமடைந்துள்ளார். இலக்கு தவறி துப்பாக்கிக் குண்டு அவரது வலது கையைக் காயப்படுத்தியுள்ளது.

நேற்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்கு உட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது கூட்டத்திலிருந்து எழுப்பிய  இளைஞன் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுடுள்ளார்.

துப்பாக்கியால் சுட்ட இளைஞன் அபித் உசேன் (21) என்ற  அடையாளம் காணப்ப்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அஹ்சன் இக்பாலுக்கு நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புள்ள அசீம் என்கிற காஷி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல்