வறட்சியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு.!



வறட்சியான காலநிலை தொடர்வதால் யாழில் வெங்காயம் உட்பட்ட 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்த நிலையில், இளவாழை, மாதகல் மற்றும் உறும்பிராய் பகுதிகளில் வெங்காய பயிர்ச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தம்மால் பெறப்பட்ட வங்கிக்கடன்களை செலுத்துவதற்கு நிவாரணங்கள் பெற்றுத்தருமாறு அந்த பகுதி விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், விவசாயிகள் விளை நிலங்களில், கடந்த வருடம் உருளைக்கிழங்கு பயிர்ச் செய்கையில் ஈடுபட்டதாகவும், உரிய காலத்தில் விதை உருளைக்கிழங்குகள் கிடைக்காத காரணத்தினால் இந்த வருடம் மாற்றுபயிர்ச் செய்கையாக வெங்காயத்தை பயிரிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?