ரணிலுடன் ஒப்பந்தம்- மக்களுக்கு காட்டினார் ஆனந்தன் எம்.பி

பிரதமர் ரணில் விக்கிரமசங்கவுககு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணையில் எதிராக வாக்களிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை இன்று மக்களுக்கு வெளிப்படுத்தினார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

வவுனியா பாவக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்து கொண்ட ஒப்பந்தக்கடிதத்தின் மூலப்பிரதிகளை மக்கள் மத்தியில் காட்டியிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்றத்தில் எனக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் அதற்கான சந்தர்ப்பத்தினை கேட்டே எமது கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சத்திரனும் நானும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும் அதன் பின்னரே ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாகவும் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் உண்மையான நிலைமை எது என்பதனை பகிரங்கப்படுத்தவேண்டீயுள்ளது. நாம் சில கோரிக்கைகளை அவருக்கு எழுத்து மூலமாக முன்வைத்தோம். அரசியல்கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சனைகள், காணி விடுவிப்பு, காணாமல்போனோர் விடயம் உட்பட பல விடயங்களை உள்ளடக்கிய எழுத்து மூலமாக முன்வைத்தோம்.


எமது கோரிக்கைக்கு உடன்பட்டு ரணில் விக்கிரமசிங்கவும் எழுத்து மூலமாக தனது கையெழுத்திட்டு ஒப்பந்தமொன்னை வழங்கியுள்ளார். நாம் வெறுமனே ஆதரவு தெரிவிக்கவில்லை. எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே செயற்பட்டிருந்தோம்.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பந்தனுக்கும் 3 பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்க எந்தவித எழுத்து மூல ஒப்பந்தத்தையும் செய்ய முடியாதுள்ளது. அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் எதனையும் கேட்க முடியதவர்களாக உள்ளனர்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக உரையாற்ற வேண்டாம் என எம்மிடம் தெரிவித்திருந்தார். ஏன் இவ்வாறு அவர்கள் செயற்படுகின்றார்கள் என்பது ஆச்சரியமாகவுள்ளது.

ஒரு தனி மனிதனாக என்னால் ரணில் விக்கிரமசிங்கவுடன் நிபந்தனை போட முடியுமாக இருந்தால் 15 பேராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் எவ்வளவு காரியத்தை சாதிக்க முடியும். ஆனால் எதனையும் செய்யாது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகின்றனர். அது மாத்திரமின்றி 3 பட்ஜெட்டுக்கும் ஆதரவளித்துமுள்ளனர் என தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?