பனைவளத்தை காக்கவும் நுங்கு திருவிழா ஏற்பாடு
நாளை திங்கள்கிழமை [07.05.2018] அன்று மன்னார் ஊயிலங்குளம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அழிந்துவரும் பனைவளத்தை காக்கவும் பனை உற்பத்தி பொருட்களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவும் இளைஞர்கள் மற்றும் அடுத்த தலை முறை தமிழ் பிள்ளைகளுக்கு பனைவளத்தை கொண்டு சேர்க்கும் நிகழ்வாக இது இடம்பெறவுள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணிக்கு நெளுக்குளம் மன்னார் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் விழிப்புணர்வு பேரணி கட்டைகாடு பகுதியை 10.00 மணியளவில் நிறைவுபெறும்
தொடர்ந்து அங்கு நுங்குகுடித்தல்,
பதநீர்அருந்துதல்,
நூங்குவண்டில். ஓட்டம் என்பன இடம்பெறும்.
தொடர்ந்து திருக்கேதீச்சம் பலாவி தீர்த்தத்தில் நுங்கு குளித்தலுடன்
திருவிழா நிறைவுபெறும்.
Comments
Post a Comment