பொருளாதார மத்திய நிலையத்தில் வவுனியா வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படல் வேண்டும்

வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகளை ஏற்கனவே வவுனியாவில் உள்ளுர் உற்பத்திப்பொருட்களைவிற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் கடந்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 
அதில் வவுனியா மதகுவைத்தகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பொருளாதார மத்திய நிலையத்தில் 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை திறந்த கேள்விகோரல்மூலம் வழங்குவதற்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறியகிடைக்கின்றது. 
கடந்த 40 வருடங்களாக வவுனியா நகரில் 35 கடைகளில் உள்ளுர் உற்பத்திபொருட்கள் விற்பனையாளர்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். திறந்த கேள்விகோரல் மேற்கொள்ளப்படால் வவுனியா வியாபாரிகள் தென்பகுதி வியாபாரிகளுடன் போட்டிபோட முடியாத நிலைமை ஏற்படலாம். இதனால் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு கடைகள் கிடைக்காமல்போக வாய்ப்பு ஏற்படலாம். எனவே நீண்டகாலமாக வியாபார நடவடிக்கைகளை மேறகொள்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை வழங்க வேண்டும். மிகுதியாவுள்ள 15 கடைகளையும் திறந்த கேள்விகோரல்மூலம் ஏனையவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இவரது கோரிக்கையானது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபரினால் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதமூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?