ரமழானை முன்னிட்டு கத்தார் குடிமக்களுக்கு மானிய விலையில் ஆட்டிறைச்சி விற்பனை!
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கத்தார் நாட்டு குடிமக்களுக்கு மானிய விலையில் ஆட்டிறைச்சிகளை விற்பனை செய்யவுள்ளதாக கத்தார் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புனித ரமழான் மாதத்தில் அனைத்து குடிமக்களுக்கு நியாயமான விலையில் ஆட்டிறைச்சிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையாக இது அமையப் பெறும். இதற்காக Widam Food என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தப்பமொன்றும் செய்யப்பட்டுள்ளது. கத்தார் குடி ஒருவருக்கு இரண்டு முழு ஆடுகள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த அடிப்படையில்
- சிரிய ஆடு 40KG - QR950 வரையும்
- ஈரானிய ஆடு 35KG - QR650 வரையும்
- கத்தார் ஆடு 30KG - QR1050 வரையும்
என்ற அடிப்படையில் விற்கப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை எதிர்வரும் 13ம் திகதி முதல் ரமழான் மாதம் இறுதிவரை நிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment