பிரதேசசபையால் வீதி புனரமைக்கப்படவில்லை என்று சொல்கிறார் வட்டார உறுப்பினர். - கோகிலகுமார் அஞ்சலிதேவி

வவுனியா அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் பிரதேசசபையால் எந்தவிதமான வீதி அபிவிருத்தியும் நடைபெறவில்லை என குறித்த வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் கோ.அஞசலிதேவி தெரிவித்தார்.

ஒமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வீதி புனரமைப்பு தொடர்பாக செய்தி வெளிவந்த நிலையில் அப்பகுதி மக்களால் அவ்வாறு எவ்வித வீதிகளும் புனரமைக்கப்படவில்லை என ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த உறுப்பினரிடம் வீதி ஏதும் புனரமைப்பு குறித்த பகுதியில் செய்யப்படுகின்றதா என தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,

பிரதேசசபையால் எந்தவித ஒதுக்கீடும் செய்யவில்லை அத்தோடு இந்த வருடத்திற்கான ஒதுக்கீடுகளும் முடிவடைந்துவிட்டது. சில ஊடகங்களில் இவ்வீதி புனரமைப்புக்காக வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தால் நிதி ஒதுக்கீடு செய்ததாக அறியக்கிடைத்தது. இவ்வீதி புனரமைப்பிற்கு பிரதேசபையால் எவ்வித ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இது வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் செய்வதால் அவருடன்தான் தொடர்பு கொள்ள வேண்டி இருக்கும் என தெரிவித்தார்.

இதன் போது ஊடகவியலாளர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவரின் புகைப்படம் போட்டு வீதி புனரமைக்கப்படுவதாக செய்தி வெளிவந்திருந்தது  என கேட்ட போது அது தொடர்பாக எனக்கு அறிவிக்கப்படவில்லை ஆனால் பிரதேசசபையால் செய்யப்படவில்லை. இது வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களால் ஒமந்தை வீட்டுத்திட்டத்தில் எந்த எந்த வீதி எத்தனை கிலோ மீற்றரில் செய்வதாக தெரிவித்திருந்தார். ஆகவே இது அவருடைய மாகாணசபை நிதியில் இருந்தே செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.

இந் நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு குறித்தவீதி திருத்தப்பட்டதாக வெளிவந்த செய்தி தவறானது எனவும் தான் குறித்த பகுதியில் உள்ள வீதியை திருத்தம் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் சென்று பார்வையிட்டிருந்தாகவும் வீதி செப்பனிடும் பணி ஆரம்பிக்கப்பட்டதாக யாருக்கும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு வெளிவந்த செய்திகள் தவறானது எனவும் தெரிவித்திருந்தார்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?