வவுனியா குட்செட் வீதி புகையிரதக் கடவையில் கடமையில் உள்ள பொலிசார் அசமந்தம்
வவுனியா, குட்செட் வீதி ஆலடி புகையிரதக் கடவையில் கடமையில் இருக்கும் பொலிசார் அசமந்தமாக செயற்படுவதால் விபத்துக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள புகையிரதக் கடவையின் அருகே காவலரண் அமைத்து பொலிசார் கடமையில் இருக்கின்ற போதும் புகையிரதம் வரும் போது கடவையில் உள்ள மறியலை போடாது அசமந்தமாக செயற்படுவதாகவும், இதனால் பலரும் புகையிரதம் வருவதை அவதானிக்காது செல்’வதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவ் வீதி வழியாக பயணிப்போர் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment