கிண்டலான விமர்சங்களுக்கு பதிலளித்த சமந்தா
Samantha Akkineni has been vocal about her marriage and the stereotypes associated with it.
திருமணத்திற்கு பின்னர் நடிகை சமந்தா நடித்து வெளிவந்த 'ரங்கஸ்தலம்' படத்தில் அவர் லிப்கிஸ் கொடுத்த காட்சி குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன.
இந்த நிலையில் அவர் இதுகுறித்து ஏற்கனவே விளக்கமளித்தபோது, அந்த காட்சியில் தான் கன்னத்தில் தான் முத்தம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த காட்சி போட்டோகிராபி டிரிக் மூலம் லிப்கிஸ் கொடுத்ததாக மாற்றியமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறியிருந்தார்
இந்த காட்சி குறித்து மேலும் அவர் விவரிக்க விரும்பவில்லை என்று கூறப்படும் நிலையில் இதே லிப்கிஸ் காட்சியில் ஒரு நடிகர் நடித்தால் இதுபோன்ற கேள்விகள் ஏன் எழுவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய குடும்பத்தினர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பாக தன்னுடைய மாமனார் நாகார்ஜூனா தனக்கு முழு சப்போர்ட் கொடுத்து வருவதாகவும் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் தான் திருமணமானவ்ர் என்பதாலே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கிண்டலான விமர்சனங்கள் இன்ஸ்டாராகிராம், டுவிட்டர் ஆகியவற்றில் வருவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments
Post a Comment