தனி ஒரு நபரையோ, குழுவையோ அல்லது விபத்து சம்பவங்களையோ தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் இரு வருட சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டில் புதிய சட்டம் ஒன்று கடந்த 8ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கத்தாரில் பணிபுரியும் இலங்கையர்கள் உட்பட அனைவரும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி மூலம் பொதுவில் புகைப்படம், வீடியோ எடுப்பது தொடர்பான புதிய சட்டம் கத்தாரில் கடந்த 8 (2017-03-08) ஆம் திகதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கத்தாரின் குற்றவியல் சட்டக்கோவையின் 333 சரத்தின் படி இன்படி, தனி ஒரு நபரையோ அல்லது குழுவையோ அவர்கள் அறியாத வேளையில் அவர்களின் கடிதத்தை திறந்து பார்த்தல், தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டல், தனிப்பிட்ட கலந்துரையாடல்களை ஒலிப்பதிவாகவோ அல்லது காணொளியாகவோ பதிவு செய்தல் போன்ற சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும். இதேபோன்று வீதி விபத்துக்களையும் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் புகைப்படங்களையும் அவர்களின் அனுமதியின்றி கையடக்கதொலைபேசியில் புகைப்...
Comments
Post a Comment