புதுவையிலிருந்து சென்னை மற்றும் சேலத்திற்கு புதிய விமானம்


புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்திற்கு ஜூலை 15 ம் தேதி தொடங்கப்படவுள்ள புதிய விமான சேவையால் 45 நிமிடத்தில் புதுவை சென்றடைய முடியும்.

தற்போது, புதுச்சேரியிலிருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்திற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் புதுவையிலிருந்து சென்னை மற்றும் சேலத்திற்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் புதிய விமான சேவையை ஏர் ஒடிஷா நிறுவனம் துவங்குகிறது. புதுவை விமான நிலையத்திலிருந்து தினசரி இரண்டு முறை விமானம் இயக்கப்படவுள்ளது.

இந்த விமானப் பயணத்திற்கான முன்பதிவு ஏர் ஒடிஷாவின் இணையதளமான www.airodisha.com ல் துவங்கியுள்ளது. பயணக்கட்டணமாக சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு 1940 ரூபாயும், புதுவையிலிருந்து சென்னை செல்ல 1470 ரூபாயும் மற்றும் புதுவை - சேலம் இடையேயானப் பயணத்திற்கு 1550 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக வாடகைக் காரில் சென்னை மற்றும் சேலத்திலிருந்து புதுவை செல்ல மூவாயிரம் ரூபாய்க்கு மேல் ஆவதோடு பயண நேரமும் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகும். இந்த விமான சேவையின் மூலம், காரை விடக் குறைந்த கட்டணத்தில் 45 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல்