வன்முறையை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நமோ செயலி வாயிலாக பா.ஜ.க. தொண்டர்களிடம் பேசிய அவர், வன்முறையை எந்த வடிவிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
தொழில்நுட்பத்தை புகுத்துவதில் பா.ஜ.க. ஆர்வம் காட்டும் வேளையில், காங்கிரஸ் கட்சியோ வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தும், ஆதார் அட்டை குறித்தும் வதந்தி பரப்புவதாகக் குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் BPO தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும், அரசுக்கு உதவிபுரிய திறமை மிக்க 50 இளைஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பு இன்மை அதிகமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கூறினார்.

Comments
Post a Comment