வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி!!


வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி கிராம அபிவிரித்திச் சங்கத்தின் தலைவர் இ.பரமேஸ்வரன் தலைமையில் இன்று (07) நடைபெற்றது.

நிகழ்வில் விருந்தினர்கள் மாணவர்களால் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை மற்றும் தேசியக்கோடி ஏற்றப்பட்டு உக்குளாங்குளம் சிவன் கோவில் பிரதம குரு சிவசிறி தியாகசக்திதரக்குருக்களால் ஆசியுரை வழங்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.
முன்பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி, நடன நிகழ்வு மற்றும் வழையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.





நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் பூ.சநதிரபத்மன், வவுனியா சுகாதாரத்திணைக்களம் வைத்தியகலாநிதி எம்.மதிதரன், முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் த.தர்மபாலன், பண்டாரிக்குளம் கிராம உத்தியோகத்தர் எஸ்.பி.உமாபதி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ராதிகா விஜியகுமார் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.  












Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல்