வவுனியாவில் பெருமளவில் கேரள கஞ்சா மீட்பு:மூவர் கைது

வவுனியா ஓமந்தை, பன்றிக்கேய்தகுளம் பகுதியில் 69 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கடத்தி வந்தவர்கள் என சந்தேகிக்கும் 3 பேரையும் பொலிஸாா் கைது செய்துள்ளனர்.
விசேட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் பொன்சேகா தலைமையிலான குழுவினரின் விரைவான நடவடிக்கையின் மூலம் இந்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்.......
பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (06-05-2018) அதிகாலை ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள தோட்டகாணியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 69 கிலோ 700 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வவுனியா, மல்லாவி, தொண்டைமானாறு பகுதிகளை சேர்ந்த 28 வயதிற்கு உட்பட்ட 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் நேற்று விடுமுறை தினம் என்பதால் நீதவான் இல்லத்தில் ஆயர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் குறித்த கஞ்சா மரக்கறி லொறிக்குள் பதுக்கப்பட்டு தம்புள்ளை நோக்கி கொண்டு செல்லப்பட இருந்ததாக பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment