இங்கிலாந்திலிருந்து டெல்லிக்கு கணவரின் பாஸ்போர்ட்டில் 4200 மைல்கள் பறந்து வந்த பெண்!

கீதா மோதா என்கிற 55 வயது இந்தியப் பெண் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகர விமான நிலையத்திலிருந்து துபை வழியாக எந்த செக்-இன் தடங்களும் இன்றி கணவரின் பாஸ்போர்டில் பறந்து வந்தார். பயண அவசரத்தில் அவர் தனது கணவரின் பாஸ்போர்ட்டை தவறுதலாக எடுத்து வந்திருந்தார்.

அவரிடமிருந்த லக்கேஜில் 2 கிலோ கூடுதலாக இருந்ததை சரியாக கவனித்து வேறொரு லக்கேஜில் மாற்றி வைக்கச் சொன்ன மான்செஸ்டர் விமான நிலைய ஊழியர் பாஸ்போர்ட்டில் இருந்த போட்டோவையே, பெயரையோ பார்க்கத் தவறியுள்ளார். எனினும் டெல்லி ஏர்போர்ட்டிலிருந்து அவர் மீண்டும் துபைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவருடைய ஒரிஜினல் பாஸ்போர்ட் இங்கிலாந்திலிருந்து துபைக்கு வரும் வரை காத்திருந்து மீண்டும் இந்தியா வந்துள்ளார்.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?