புடினுக்கு எதிராக போராட்டம்: 1,600பேர் கைது



ரஷ்ய ஜனாதிபதியாக புடின் நான்காம் முறையாக பதவியேற்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், புடினின் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய முக்கிய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸே நவால்னி உட்பட சுமார் 1,600பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்னர் எந்த குற்றச்சாட்டும் பதியப்படாமல் பொலிஸ் காவலிலிருந்து நவால்னி விடுவிக்கப்பட்டார்.
ரஷிய ஜனாதிபதியாக மீண்டும் தேர்;வு செய்யப்பட்டுள்ள புடின் பதிவியேற்கவுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அலெக்ஸே நவால்னி அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்நிலையில் மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை அருகே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற அலெக்சி நவல்னி-யை புஷ்கின்ஸ்கயா சதுக்கம் அருகே பொலிஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்து வானில் ஏற்றிச் சென்றனர்.
இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புஷ்கின் சதுக்கத்தில் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 1,600பேரை பொலிஸார் கைது செய்தனர்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

கத்தாரில் வேலை செய்பவர்களே அவதானம் : பொது இடங்களில் புகைப்படம் எடுப்பவரா நீங்கள்? : புதிய சட்டம் அமுல்