15 மாதங்களில் முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

15 மாதங்களில் தேசியப்பட்டியலின் ஊடாக முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியுமா எனவன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா பாவக்குளம் படிவம் 1 கிராமத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்பொதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாணசபை முதலமைச்சரையே அடுத்து வரும் மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில் முதலமைச்சர் தான் தன்னுடைய பாதையில் செல்வேன் என்று தெரிவித்திருந்தார். 

இந் நிலையில் மீண்டும் முதலமைச்சராகவும், தனியான அல்லது கூட்டு கட்சியாகவும் வரக்கூடாது என்பதற்காக ஒரு புதுக்கதையை சொல்கின்றார்கள். தேசிய ரீதியான இனப்பிரச்சனை மற்றும் தீர்வுத்திட்டத்தினை கதைப்பற்காக தேசியப்பட்டியலின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக முதலமைச்சரை கொண்டு வர உள்ளதாக கூறுகின்றார்கள். 

மூன்று வருடகாலமாக இடைக்கால அறிக்கையை கொண்டு வந்து அதனை உப்புச்சப்பில்லாமல் ஆக்கியுள்ளதோடு நிபந்தனையற்ற ஆதரவையே இந்த மூன்று வருட காலமாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் இன்னும் இருக்கின்ற 15 மாதங்களில் தேசியப்பட்டியலின் ஊடாக முதலமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராகி எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியுமா என தெரிவித்தார்.
இதன்போது செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Comments

Popular posts from this blog

வரட்சியால் யாழில் ஏற்பட்டுள்ள அழிவு

பிக்பாஸ் 2-வில் முரட்டு குத்து நாயகி - லேட்டஸ்ட் தகவல்

ஆனோல்ட் பெரிய கொம்பல்ல:யோகேஸ்வரி?