புனித ரமலானின் இறுதி 10 நாட்கள் உம்ரா யாத்ரீகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு!
'ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்'என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரிஇ முஸ்லிம்)
என்கிற மேற்காணும் ஹதீஸிற்கு ஏற்ப நன்மையை நாடும் ஏராளமானோர் உலகெங்கிலுமிருந்து உம்ரா செய்திட புனித ஹரம் ஷரீஃபை நோக்கி வருகை தருவர். ஏறக்குறைய 20 லட்சம் பேர் ஒரே இடத்தில் குழுமுவதால் உம்ரா யாத்ரீகர்கள் தவாப் சுற்றுதல், ஸஈ எனும் தொங்கோட்டம் ஓடுதல் போன்ற கடமைகளை நிறைவேற்றுவதற்கு மிகுந்த சிரமத்தை சந்திப்பர். புனித ரமலானின் இறுதி 10 தினங்களின் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் காணப்படும்.
எனவே, எதிர்வரும் புனித ரமலானின் முதல் 20 தினங்களின் போது தினமும் மஃரிப் முதல் இரவுத் தொழுகை (தராவிஹ்) நிறைவுறும் வரை மடஃப் (Mataf) பகுதியில் உம்ரா யாத்ரீகர்கள் மட்டுமே தவாப் சுற்றவும், தொழவும் அனுமதிக்கப்படுவர். உம்ரா பயணிகள் அல்லாத பிற தொழுகையாளிகள் சுற்று வளாகத்தில் மட்டுமே தொழலாம்.
அதேபோல், புனித ரமலானின் கடைசி 10 நாட்களின் போதும் தினமும் மஃரிப் முதல் தஹஜ்ஜத் நேரம் முடியும் வரை உம்ரா யாத்ரீகர்கள் மட்டுமே மடஃப் பகுதியில் தவாப் செய்திடவும், தொழுதிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், இறுதி பத்தின் போது புனித இஹ்திகாப் எனும் கடமையை நிறைவேற்றுவோருக்கு வசதியாக வரிவுபடுத்தப்பட்ட வடக்கு பகுதியின் அடித்தளத்தில் (Basement) மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என புனித மக்கா நகர கவர்னரும், மத்திய ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் காலித் அல் பைசல் அறிவித்துள்ளார்கள்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

Comments
Post a Comment